IMG Scroll Animation (yes/no)

உள்நாட்டு

PageNavi Results No.

Advertisement
Advertisement

இறக்காமத்தில் தியாகத் திருநாள் கொண்டாட்டம்.

எஸ்.எம். சன்சீர். 

உலக முஸ்லிம்கள் அனைவரும் 02.09.2017 இன்று புனித ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளை கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இறைவனின் தூதரான இப்றாகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10-ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.

தியாகம், அர்ப்பணிப்பு, கொடை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஹஜ் பெருநாளை தியாகத்திருநாள் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

தம்மிடமுள்ள, தமக்குப் பிடித்தமான அனைத்தையும் படைத்த இறைவனின் நற்கருணையை மட்டும் எதிர்பார்த்து, ஏழை, எளிய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் தியாக மனப்பான்மையை ஊக்குவித்து, அதனைக் கொண்டாடும் வகையில் ஹஜ் பெருநாள் முஸ்லிம்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் பெருநாளின்  போது முஸ்லிம்கள் அளிக்கும் குர்பானி நன்கொடையும் ஏழை மக்களின் மகிழ்ச்சியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொடைகளில் ஒன்றாகும்.

முஸ்லிம்களின் ஐந்தாம் கடமையான ஹஜ் கடமையுடன் இணைந்ததாக கொண்டாடப்படும் ஹஜ் பெருநாள், ஹஜ் கடமையின் இறுதி நாளாகவும் அமைந்துள்ளது.

இந்நிலையில் முஸ்லிம்கள் பிராத்தனைகளிலும், தொழுகையிலும் ஈடுப்பட்டு ஹஜ் பெருநாளை கோலாகலமாக கொண்டாடிக் வருகின்றனர்.

அந்தவகையில் இறக்காமம் குளக்கரை மைதானத்தில்  மூஸ்லீம்கள் புனித ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் பண்டிகையை விசேட தொழுகையில் ஈடுப்பட்ட பின்னர் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.

இறக்காமத்தை பிறப்பிடமாக கொண்ட அஷ்ஷெய்க் மௌலவி நியாஸ்   தலைமையில் இறக்காமம் மூஸ்லீம் மக்கள் விசேட ஹஜ்பெருநாள் தொழுகையிலும் பிராத்தனைகளிலும் ஈடுப்பட்டிருந்தனர்.

பிறகு தமது பண்டிகையை மூஸ்லீம் மக்கள் சந்தோஷமாக கொண்டாடியதை காணக்கூடியதாக இருந்தது.

இறக்காமத்தில் தியாகத் திருநாள் கொண்டாட்டம். இறக்காமத்தில் தியாகத் திருநாள் கொண்டாட்டம். Reviewed by Tamil Sri Admin on September 02, 2017 Rating: 5